என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்
- வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை வாசன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அருணின் 54-வது பிறந்த நாளை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை மற்றும் மதுரை குறிஞ்சி மலர் அரிமா சங்கம், வரதன் கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செல்லூர் மனோகரா நடுநிலை பள்ளியில் நடந்தது.
முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை வாசன் கண் மருத்துவமனை முதன்மை மேலாளர் பன்னீர் செல்வம், மக்கள் தொடர்பு அதிகாரி பிச்சைக்கனி மற்றும் ஊழியர்கள், குறிஞ்சி மலர் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story






