என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
- அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- இதற்கான நடைமுறைகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அருணகிரி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. தற்போது ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் அரசு கல்லூரி விரிவுரை யாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க எடுத்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கோர்ட்டு ஒப்புதலும், அனுமதியும் வழங்கியுள்ளது. ஆட்சி மாறியதும் அதிகாரிகள் இந்த தேர்வை நிறுத்த முயற்சிக்கின்றனர்.
இதில் முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வை நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். 12 மாதங்கள் பணி செய்தாலும் 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டாக்டர் தெய்வராஜ், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






