என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமதர்மத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்
    X

    மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பூங்கொத்து ,நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ,

    ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜ்சத்யன் உள்ளனர்.

    சமதர்மத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்

    • சமதர்மத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


    மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மதுரையில் சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் மகிழ்ச்சி யோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வைகை நதிக் கரையில் இலட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.நமது வருங்கால முதல்வர் எடப்பாடியார்.

    சித்திரை திருவிழாவை போல மீண்டும் ஒரு சித்திரை திருவிழாவை மதுரை மண் இன்றைக்கு கண்டிருக்கிறது. தொண்டர்களை, ஏழை, எளிய மக்களை வாழ வைப்பதற்காக தன்னை அர்ப்பணித்த எடப்பாடி பழனிசாமியை வருக வருக என்று மதுரை மக்களின் சார்பாக வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். மதுரையே முதன்முதலாக உங்களால் தான் மனித தலைகளாக சங்கமித்தி ருக்கிறது.

    உலக தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்கை உடைத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தார். அவர் அன்று ஆற்றிய உரை தான்அவரை அமெரிக்க அ.திபராக்கியது. அதுபோல நாட்டிலுள்ள முட்களை அகற்றி மலர்களை மலரச் செய்யும் மகத்தான தலைவராக எடப்பாடி யார் இன்றைக்கு நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறார்.

    மீனாட்சி அம்மன் குடி கொண்டுள்ள இந்த மதுரை யில் எடப்பாடியார் சிறப் பான மாநாட்டை நடத்தி உள்ளார். தமிழகத்தில் மீண்டும் அவரை ஆட்சியில் அமர்த்துகிற சாட்சியாக இந்த மாநாடு அமையும். சம தர்மத்தின் அடையாளமாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் இன்றைக்கு மதுரை மண்ணில் திரண்டு இருக்கிற தொண்டர் படைகளை இந்த நாடே கண்டு வியந்துள்ளது.

    இந்த மாநாட்டின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்று விட்டோம் எனவே இன்றைக்கு கழகக் கொடியை ஏற்றி வைத்த எடப்பாடியார் விரைவில் தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றுவார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வந்தது முதல் பல்வேறு வகைகளில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமை பறிபோய் உள்ளது. அதனை மீட்டெடுக்கும் ஒரே சக்தியாக ,ஆற்றல் அரசராக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×