search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் சீரழிந்த செல்லூர்-குலமங்கலம் சாலை

    • மதுரை கிழக்கு, வடக்கு தொகுதி மாநகராட்சி 24, 25-வது வார்டுக்கு உட்பட்டது.
    • கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கு குழி ேதாண்டி 18 மாதமாகியும் மூடாத அவலத்தால் சாலை சீரழிந்து உள்ளது.

    மதுரை

    மதுரை கிழக்கு, வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி 24, 25-வது வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குலமங்கலம் சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். காளவாசல், அரசரடி, ஆரப்பாளையம், தத்தனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மகாத்மா காந்திநகர், குலமங்கலம், பனங்காடி உள்பட பல பகுதிகளுக்கு செல்பவர்களின் பிரதானமாக விளங்குவது இந்த குலமங்கலம் சாலையாகும்.

    வருமான வரித்துறை அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்துள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக இந்த சாலை தோண்டப்பட்டு தற்போது வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 18 மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணியால் இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

    மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் இருந்து பறக்கும் புழுதியும், தூசியும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் பட்டு, வாகனங்களில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும் நிலையையும் ஏற்படுத்துகிறது. பகலில் இந்த நிலைமை என்றால், இரவினில் வாகனம் ஓட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    மழை காலங்களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சேரும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்தும், வாகனங்க ளிலும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. முதி யோர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இருசக்கர வாக னத்தில் அமர்ந்து சென்றால் நிலைமை விபரீதமாகும் அளவிற்கு இந்த சாலைகள் படுமோசமாக உள்ளது. இது குறித்து ஆட்டோ டிரைவர் ஜெயபாண்டி கூறியதாவது:-

    நான் இந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த இரண்டு வருடங்க ளாக இந்த சாலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்தச் சாலையில் வண்டி ஓட்டுவதால் அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடு கிறது. வாகனத்தின் எஞ்சினிலும் பழுது ஏற்படுவதால் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டு வதற்கு பெரும் பாலான ஆட்டோ டிரைவர்கள் அஞ்சும் நிலை உள்ளது என்றார். ஒரு சில சமயங்களில் சவாரிகளை புறக்கணிக்கும் நிலையும் ஏற்பட தவறியதில்லை என்றார்.

    இது குறித்து 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாணிக்கம் (அ.தி.மு.க.) தெரிவித்ததாவது:-

    வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் அமைப்ப தற்கு முதன்முதலில் சாலைகள் தோண்டப்பட்டது. அதன் பிறகு வீடுகளுக்கு இணைப்பு குழாய் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டது. தற்போது ரூ.5 கோடி மதிப்பில் செல்லூர் கண்மாய் கரையை அகலப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய ஏதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 6 மாத காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

    இப்பகுதியில் கடை வைத்துள்ள ரஷீத் அலி, செந்தில் கூறியதாவது:-

    சாலைகளை சமப்படுத்தாமல் ஜல்லிக் கற்களை மட்டும் கொட்டி வைத்துள்ளனர். இதிலிருந்து பறக்கும் தூசிகளால் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் தூசி படர்ந்து கரையாகி விடுகிறது. இதனால் பொருட்களை விற்கமுடியவில்லை. இதனால் மிகப்பெரிய பொருள் இழப்பு மற்றும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் செல்லும் மாணவ, மாணவிகளின் சைக்கிள் சாலையில் கொட்டிக்கிடக்கும் கற்களால் டயர் பஞ்சராகி உருட்டி செல்வதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

    25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் (தி.மு.க.) கூறியதாவது:-

    வைகை கூட்டுக்குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக சாலையின் மையப்பகு–தியில் தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் கோரிக்கை வைத்திருக்கி றேன். அவர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் நலன்கருதி மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையை சீரமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும் என்றும், பொதுமக்களின் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெறுவதால் அதனால் ஏற்படும் சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தக்கூடிய செல்லூர் குலமங்கலம் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    Next Story
    ×