search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி
    X

    சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி

    • சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
    • குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அனைத்து மாதங்களிலும் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளை சுற்றுவதும், பின்னர் இளைப்பாற அங்கு சிறிது நேரம் அமர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம். இதனால் சித்திரை வீதிகளில் தினமும் மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.

    ஆனால் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (23-ந்தேதி) தொடங்க உள்ளது. அன்றிலிருந்து தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடப்பதால் மீனாட்சி அம்மன் கோலில் பகுதி முழுவதும் விழாக்கோ லம் பூண்டு காணப்படும்.

    விழா நடக்கும் அனைத்து நாட்களும் சுவாமி வீதி உலா உள்ளிட்டவைகளை பார்க்க உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் சித்திரை வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா நடக்கும் போது, பக்தர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவேண்டியது அவசியமானதாகும்.

    தமிழகத்தின் முக்கிய கோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இருக்கும் வசதி கூட இங்கு இல்லை என்பது பக்தர்களின் புலம்பலாக இருக்கிறது.

    தற்போது சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கோவில் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×