search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    கொரோனா தடுப்பூசி முகாம்

    • மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மையங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் - (ஊரக பகுதிகளில் 107498 மாநகர பகுதிகளில் - 112758) உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேர் (ஊரக பகுதிகளில் 590374 மாநகர பகுதிகளில் -572733) உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×