search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை
    X

    பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.

    பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை

    • விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர்.
    • தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.

    திருப்பரங்குன்றம்

    தமிழ் மொழியை செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அவரது பிறந்தநாள் விளாசேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

    கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் கோ. தளபதி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி கவுன்சிலர் இந்திரா காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, ராமர், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டச் செயலாளர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் சுவீதா விமல் தலைமையில் கவுன்சிலர்கள் உசிலை சிவா, விஜயா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பிராமணர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையா தலைமையில் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதன் தலைவர்அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர் காளிதாசன், பொருளாளர் அண்ணாமலை, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் தொகுதி தலைவர் ஆறுமுகம் தலைமையில் செயலாளர் மருதமுத்து, கலை இலக்கிய பாசறை செயலாளர் முருகன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, பாண்டித்துரை, விஜய், சின்னசாமி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×