search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 இடங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிகள்
    X

    மதுரையில் ரெயிலை ‘வாஷிங்’ செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

    4 இடங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிகள்

    • மதுரை கோட்டத்தில் 4 இடங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதியுடன் இந்த சோதனை நடத்தப்படும்.

    மதுரை

    மதுரையின் பெரும்பாலான பகுதிகளில் கார்களின் அடிப்பகுதியை தண்ணீரால் கழுவுவதற்காக, வாஷிங் நிலையங்கள் உண்டு. அங்கு கால்வாய் போன்ற அமைப்பு இருக்கும். அதற்குள் இறங்கி காரின் அடிப்பகுதியை தண்ணீர் அடித்து கழுவுவார்கள்.

    இதே போல மதுரை ரெயில் நிலையத்தில் 24 பெட்டிகளையும் சுத்தம் செய்யும் வகையில் ரெயில் வாஷிங் நிலையம் உள்ளது. இங்கு நீளமான கால்வாய் (பிட் லைன்) உள்ளது. அதற்குள் ஊழியர்கள் இறங்கி ரெயில் சக்கரம் மற்றும் அடிப்பாகத்தில் உள்ள முக்கிய கருவிகளை சோதனை செய்வார்கள்.

    பிட் லைனின் இருபுறமும் 'கேட் வாக்' நடைமேடைகள் உண்டு. அங்கிருந்து ரெயிலின் வெளிப்புறப் பகுதி நீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல உட்புறமும் நீர்வேக அழுத்த கருவிகள் மூலம் கழுவப்படுகிறது.

    இயற்கை கழிப்பறைகள், ரெயில் கதவுகள், விளக்குகள், காற்றாடிகள், அலைபேசியை சக்தியூட்டும் இணைப்புகள், குளிர்சாதன கருவிகள் ஆகியவை சரியாக இயங்குகிறதா? என்பதையும் ஊழியர்கள் உறுதி செய்கின்றனர்.

    ரெயில் பெட்டிகளில் பயணிகள் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீர் ஏற்றப்படுகிறது. ரெயில்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும் போதும் ரெயில் ஓடும் நிலையில் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதியுடன் இந்த சோதனை நடத்தப்படும்.

    மற்ற ஊர்களில் இருந்து ரெயில், நடைமேடைக்கு வந்தவுடன் இணைப்பு பெட்டிகளின் வெப்பநிலை, இன்ப்ரா-ரெட் தெர்மாமீட்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செய்யப்படுகிறது. இது தவிர ரெயில் பெட்டிகளுக்கு உரிய காலமுறை சோதனைகளும் உரிய நேரங்களில் நடத்தப்படுகிறது.

    மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம் ஆகிய நிலையங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு 961 ரெயில் பெட்டிகள் பராமரிக்கும் வசதிகள் உள்ளன. தற்போது சராசரியாக 491 ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×