என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி
  X

  தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
  • விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  உசிலம்பட்டி

  உசிலம்பட்டி அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராம் மகன் தங்கமாயி (26). இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்றிரவு உறவினரை பார்ப்பதற்காக காளப்பன்பட்டிக்கு மானூத்து வழியாக இதே ஊரைச் சேர்ந்த நண்பர் உக்கிரபாண்டி மகன் தினேசுடன்(25) பைக்கில் சென்றார். மானூத்து அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

  படுகாயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளின்றி தங்கமாயி பரிதாபமாக இறந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  Next Story
  ×