search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ரேசன் கடைகளை மாற்ற நடவடிக்கை
    X

    மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ரேசன் கடைகளை மாற்ற நடவடிக்கை

    • மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ரேசன் கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சட்டசபையில் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைத்து மதுரை மக்களுக்கு நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மண்ணின் மைந்தன் பத்மஸ்ரீ டி.எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்ச ருக்கு எனது சார்பிலும், தெற்கு தொகுதி பொது மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரையில் சித்திரை திருவிழா காலங்களில் ஆழ்வார்புரம், தெப்பக்குளம் பகுதிகளில் லட்சக் கணக்கான மக்கள் கூடு வார்கள். எனவே இந்த பகுதிகளில் பொதுமக்களின் அசவுகரியத்தை குறைக்கும் வகையில் பூமிக்கு அடியில் புதைவட கம்பிகள் அமைத்து மின்விநியோகம் செய்திட வேண்டுமாறு கோரிக்கை வைக்கிறேன்.

    மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 கடைகள் மட்டுமே சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே மற்ற 63 கடைகளையும் சொந்த இடத்துக்கு மாற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசை வேண்டுகிறேன்.

    மதுரை தெற்கு சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட 44-வது வார்டில் பிரசவ மருத்துவமனை அமைந் துள்ளது. இந்த மருத்துவ மனை வளாகத்தில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த 3 ரேஷன் கடைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்து தர வேண்டும்.

    தெற்கு வாசல் பகுதியில் உள்ள திரவியம் பிள்ளை மகப்பேறு மருத்துவமனை, அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மராமத்து செய்து மேம்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் 2-வது பெரிய மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அதன் சார்பு மருத்துவமனைகளான பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தோப்பூர் மருத்துவ மனைகளுக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ. 75 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டு மாறு கோரிக்கை வைக்கி றேன்.

    மதுரை சிந்தாமணி ரோட்டில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. மேலும் நான்கு வழிச் சாலையும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் அங்கு அமைந்துள்ள ெரயில்வே கேட் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிந்தாமணி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். மதுரை, ராமநாதபுரம் ரோட்டில் காலியாக உள்ள இடங்களில் உழவர் சந்தை மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

    மதுரை தெற்கு தொகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் தெப்பக் குளத்துக்கு பனையூர் வாய்க்கால் வழியாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்ப விட்டு வருகிறது. இதனால் அந்த தண்ணீர் பல இடங்களில் மாசுபடுகிறது. எனவே குருவிக்காரன் சாலை பகுதியில் வைகை ஆற்றில் புதிதாக தடுப்பணை அமைத்து அங்கிருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    இவ்வாறு பூமிநாதன் எம். எல்.ஏ. பேசினார்.

    Next Story
    ×