என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இவர் ஏற்கனவே மும்பை பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நீதிபதி கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
Next Story