search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக உணவு தினத்தை முன்னிட்டு  அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளூர் உயர்ரக விதைகள் கண்காட்சி
    X

    நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காட்சி நடந்தது.

    உலக உணவு தினத்தை முன்னிட்டு அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளூர் உயர்ரக விதைகள் கண்காட்சி

    • பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
    • விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணுக்களை பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

    வேளாண்மை துணை இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ் வரவேற்றார். நெல்லை வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) அசோக்குமார் கருத்துக்காட்சி, விழாவின் நோக்கம் குறித்து விளக்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை உரை ஆற்றினார், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், அம்பை நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் ஆகியோர் வாழ்த்த்தி பேசினர். விழாவில் பாரம்பரிய நெல் விதைகள், விவசாயிகளின் காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், இயற்கை உணவு வகைகள், தின்பண்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய பல்வேறு ஆலோசனைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினார்கள். விழாவில் அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் சொரிமுத்து, வக்கீல் பாபநாசம், இயற்கை விவசாயி லட்சுமி தேவி, சுற்று வட்டார விவசாயிகள் சிவந்திபுரம் ஸ்டான்லி, பாப்பான்குளம் ஆறுமுகம், கல்லிடை சுப்பிரமணியன், ராமையா, முக்கூடல் முருகன் ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அம்பை வேளாண்மை துறை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×