search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நூலக கட்டிடம்
    X

    சிதிலமடைந்த நிலையில் காணப்படும் நூலக கட்டிடம்


    பாவூர்சத்திரத்தில் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நூலக கட்டிடம்

    • பாவூர்சத்திரம் காம ராஜர் நகர் தெற்கு பகுதி யில் அரசு நூலகம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
    • இந்நூலக த்தை தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காம ராஜர் நகர் தெற்கு பகுதி யில் அரசு நூலகம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

    இந்நூலக த்தை தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் இந்நூலகம் இருப்பதாலும், எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியாக படிக்கலாம் என்ப தாலும் நூலகம் ஆரம்பித்த தொடக்கத்தில் பலரும் பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது இந்நூலக கட்டிடமானது பழுதடைந்து காணப்படுவதாக வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடம் என்பதாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது.

    நூலகத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்தும், கதவுகள் உடைந்தும் காணப்படுகின்றன. மழை தண்ணீர் கசியும் அபாயம் இருப்பதாலும், நூலகத்திற்கு படிக்க வரும் வாசகர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இதனால் வாசகர்களின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் குறைய தொடங்கியுள்ளது.

    எனவே இந்நூலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பாவூர்சத்திரம் பாரதி வாசகர் வட்டத்தின் சார்பில் கோ ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×