என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்
    X

    விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீலம் சந்திரகுமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி,

    தமிழ்நாட்டில் தொடந்து நிலவும் வேங்கைவயல் உள்ளிட்ட வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், குடிநீரில் மலத்தை கொட்டிய சாதிவெறி வன்முறை கும்பலை உடனே கைது செய்யவும், ரெட்டிஅள்ளி கிராமம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட வீட்டுமனைகளை சீர்படுத்தி பயனாளிகளுக்கு உடனே ஒப்படைக்கவும், தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் மீட்டுக்கொடுக்கவும், தாட்கோ நிறுவனத்தை சுயநிதியுடன் கூடிய தனி வங்கி உருவாக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜெயந்தி, தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்புச் செயலாளர் நீலம் சந்திரகுமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    தருமபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி என்கிற சமத்துவன், வரவேற்புரை ஆற்றினார்.செய்தி தொடர்பாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, அரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சாக்கன் சர்மா, பொறியாளர் கருப்பண்ணன், கிள்ளிவளவன், தருமபுரி நகர மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி உமாசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள், மற்றும், மாவட்ட, ஒன்றிய, நகரம் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×