search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் பேரணியாக சென்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    • தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.
    • சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அந்த பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக சென்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×