search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்தவாரம் களைகட்டிய நிலையில் இறைச்சி, மீன்கடைகள் வெறிச்சோடியது
    X

    வெறிச்சோடிய இறைச்சி கடைகள்.

    கடந்தவாரம் களைகட்டிய நிலையில் இறைச்சி, மீன்கடைகள் வெறிச்சோடியது

    • கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
    • இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாவட்டத்தில் நடந்த பல்வேறு ஆட்டுச்சந்தைகளில் ரூ.2 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது.

    ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், சேவல்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஆட்டுச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    ஆனால் இந்த வாரம் கடைகளில் விற்பனை தலைகீழாக மாற்றம் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் கார்த்திகை மாதப்பிறப்பு தொடங்கிய நிலையில் பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் இறைச்சி, மீன்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஒருசில கடைகளில் ரூ.1000 அளவுக்கு கூட விற்பனை நடைபெறாததால் வியாபாரிகள் மிகுந்த சோகம்அடைந்தனர். இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலை நீடிக்கும் என்பதால் இறைச்சி வியாபாரிகள் அடுத்த வரும் நாட்களில் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவு செய்து விட்டனர்.

    Next Story
    ×