என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, மானூர் வட்டாரங்களில் மின்பாதை அமைப்பதற்கு  நிலம் கையகப்படுத்தும் பணி
    X

    நெல்லை, மானூர் வட்டாரங்களில் மின்பாதை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி

    • 230 கிலோ வாட் மின்சாரம் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வசதியாக தமிழ்நாடு மின்வாரியத்தின் இரட்டை சுற்று மின்பாதை மற்றும் 9 மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • நிலத்தின் உரிமையாளர்கள் இதற்கு ஆட்சேபனை இருந்தால் எழுத்து பூர்வமாக வருகிற 28-ந்தேதி மதியம் 3 மணிக்குள் மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜராகி வழங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் வட்டம் சித்தார் சத்திரம் கிராமம் மற்றும் நெல்லை வட்டம் கங்கைகொண்டான் பகுதி-1 கிராமங்களில் அபிஷேகபட்டி, சங்கநேரி மின்பாதையில் இருந்து 230 கிலோ வாட் மின்சாரம் தனியார் சோலார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வசதியாக தமிழ்நாடு மின்வாரியத்தின் இரட்டை சுற்று மின்பாதை மற்றும் 9 மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக அந்த பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடக்க உள்ளது.

    எனவே நிலத்தின் உரிமையாளர்கள் இதற்கு ஆட்சேபனை இருந்தால் எழுத்து பூர்வமாக வருகிற 28-ந்தேதி மதியம் 3 மணிக்குள் மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜராகி வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×