search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டி - இன்று மாலை தொடங்குகிறது
    X

    கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டி - இன்று மாலை தொடங்குகிறது

    • போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.

    தினமும் 4 போட்டிகள்

    போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது. புது டெல்லி ஆக்கி இந்தியா மூலம் தேசிய மற்றும் சர்வதேச நடுவர்கள் நியமிக்கப்பட்டு தினமும் காலை 6.30, மாலை 4.30, 6.30 மற்றும் இரவு 8.15 என மொத்தம் 4 போட்டிகள் நடைபெற உள்ளன.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    முதல் பரிசு ரூ. 1 லட்சம்

    ஏ பிரிவில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் பாங்கு அணி, பெங்களூர் ெரயில் வீல் பேக்டரி, மும்பை நிஸ்வாஸ் ஆக்கி அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணியும், பி பிரிவில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி, மும்பை யூனியன் பாங்க் அணி, ஹூப்பள்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி, சி பிரிவில் சவுந்திராபாத் சவுத் சென்ட்ரல் ெரயில்வே அணி, பெங்களூரு கனரா பாஙக் அணி, புனே கஸ்டம்ஸ் அணி, சென்னை இந்தியன் பாங்க் அணி, டி பிரிவில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் பிரோமோஷன் போர்டு அணி, சென்னை சென்ட்ரல் எக்ஸிஸ் அணி, பெங்களூரு சாய் எஸ்.டி.சி. அணி, சென்னை தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

    சுழற்கோப்பை

    போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு

    ரூ. 75 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.

    மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்கப்பட

    உள்ளது. நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இத்தகவலை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முக வேல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×