என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கிக் கிடக்கும் காட்சி.
பழனி அருகே 2 லாரிகள் மோதிய விபத்தில் தொழிலாளி சாவு
- கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது.
- போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனியை அடுத்துள்ள நெய்காரப்பட்டியில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கொழுமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி அய்யம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே பழனியை நோக்கி தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் செங்கல் லோடு ஏற்றிவந்த லாரி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி அதன் மீது ஏறி நின்றது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கி சித்தரேவை சேர்ந்த பெரியசாமி (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்ததும் அப்பகுதி மக்கள் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 10 பேரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் கொழுமம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






