என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் நல நிதியை 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் - தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்
- நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக www.lwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி தொகையை, நிறுவனங்கள் இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
திருப்பூர்
தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10, ஒவ்வொரு தொழிலாளிக்கு வேலையளிப்பவர் பங்காக ரூ.20-ம் சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வருகிற 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக www.lwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி தொகையை, நிறுவனங்கள் இணையதளம் மூலமாக செலுத்தலாம். மேலும் The Secretary, Tamil nadu Labour Welfare Board, chennai-600 006 என்ற பெயருக்கு வரைவோலையாக வருகிற 31-ந் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 0006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.






