search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு
    X

    பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் பக்தர்களின் கும்பிடு சரணம் வழிபாடு

    • நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
    • விரதமிருக்கும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருமலைக்கோவில் மலையடிவாரமான வண்டாடும் பொட்டலில் 17-ந் தேதி பெருந்திருப்பாவாடை நடைபெற்றது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர். இந்தாண்டு ஏற்கெனவே மழை பெய்து தேர் செல்லும் பாதை ஈரமான நிலையில் இருந்த போதும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் நேர்த்திக் கடனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×