search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் நிதியாண்டில் 400 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
    X

    வரும் நிதியாண்டில் 400 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
    • நடப்பாண்டில், 574 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டன.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    கோவில் சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, 4,491 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4,236 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. கோவில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

    நடப்பாண்டில், 574 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோவிலில் 305 கோடி ரூபாயிலும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 166 கோடி ரூபாயிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 146 கோடி ரூபாய் செலவிலும் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வரும் நிதியாண்டில் 400 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் 485 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×