search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் கும்பகோணம் வாலிபர்கள்
    X

    மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் வாலிபர்கள்.

    மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் கும்பகோணம் வாலிபர்கள்

    • வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    • இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர்.

    சுவாமிமலை:

    மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐ.டி நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இது போன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில்வெளி யான தகவலின்அடிப்படை யில் 60-க்கும்மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பி த்தனர்.

    தற்போது வேலைவாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லா ந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்ப ட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்த ராமல் பணத்தை பெற்று க்கொண்டு மோசடி செய்து ள்ளனர். தற்போது தென்கிழக்கு மியான்மரின் கயின்மாகாணம், மியாவடி பகுதியில் அங்குள்ள இந்தியர்கள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.

    இது மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி என்றும், பூர்வகுடியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் விக்னேஷ் (22) ஆகிய 3 பேர் மியான்மரில் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர். அதில் எங்களை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இங்கு நடக்கும் கொடுமைகளை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. தினம் தினம் அதிக நேரத்துக்கு வேலை வாங்கி சித்ரவதை செய்கின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்களை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளனர் என்று குறிப்பிடப்ப ட்டிருந்தது.இந்த வீடியோவை பார்த்த அவர்களது பெற்றோர் உடனடியாக தங்களது பிள்ளைகளை மீட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து மியான்மர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழக வாலிபர்கள் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது,

    Next Story
    ×