என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
போடியில் தற்காப்பு கலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
- மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
- போடி மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு தற்காப்பு கலைகளுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
சிலம்பாட்டம், சுருள்பட்டா, மான் கொம்பு,வேல் கம்பு, நெருப்புச் சங்கிலி போன்ற தமிழர்களின் பாரம்பரியமான பல்வேறு தற்காப்பு கலைகள் சார்ந்து நடைபெற்ற போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் போடி விர்மன் சிலம்பாட்ட பயிற்சியகம் சார்பாக பங்கேற்ற மாணவ-மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மாநில அளவிலான முதல் பரிசினை தட்டிச் சென்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வெற்றி கோப்பையையும் வழங்கினார்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த தற்காப்பு கலைக ளுக்கான திறன் போட்டியில் முதலிடத்தை பெற்ற இருமல் சிலம்பாட்ட பயிற்சியக மாணவ-மாண விகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவி த்தனர்.






