search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி   சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
    X

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கவீஸ்வரர், சோமேஸ்வரர், ஆவல்நத்தம் காசிஸ்வர சாமி கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பு துர்க்கை அம்மனுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

    • சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆண்டுதோறும் தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வருடத்தின் ஒரு முறை இந்த வழிபாட்டை செய்வதின் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சி னைகளிலும் விடுபடலாம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    அன்னத்தால் சாமிக்கு நடைபெறும் அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி மலை அடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து அன்னாபிஷேகமும் நடந்தது. அன்னாபி ஷேகத்தில் கவீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை சோமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஆவல்நத்தம் காசிஸ்வர பசவேஸ்வர சிவகுமார சாமி கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.

    கிருஷ்ணகிரி போலீஸ் குடியிருப்பில் உள்ள முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×