என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி சிறுவிவசாயிகள் நலச்சங்க கூட்டம்
- தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
- உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திரளானவர்களை அழைத்து வர வேண்டும்.
அரவேணு:
கோத்தகிரி சிறு விவசாயிகள் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தும்பூர் போஜன் தலைமையில் நடைபெற்றதது. அப்போது அவர் பேசுகையில், கடந்த ஒரு மாதமாக 5 கட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 நிர்ணயம் செய்யக்கோரி ஜல்லிக்கட்டுக்கு போராடி வெற்றி பெற்றதை போன்று இதற்கும் அனைவரும் ஒன்றினைந்து பச்சை தேயிலையிக்கு குறைந்த பட்ச விலையை பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மலை மாவட்டம் சிறு, விவசாய சங்கத்தின் பதிவு காலம் முடிவடைந்ததால் மீண்டும் சங்கத்தை புதுப்பித்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை அங்கீகரிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்க முன் நின்று நடத்தும் நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் பச்சை தேயிலை கடுமையான விலை வீழ்ச்சி கண்டித்து நமது சங்க குன்னூரில் நடத்த உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒவ்வொரு செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் ஊர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களை அழைத்து வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






