என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் உலக இருதய தின ஓவியப்போட்டி
- அரசு பள்ளியில் உலக இருதய தின ஓவியப்போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
கரூர்
ஜெகதாபி ஊராட்சி துளசிகொடும்பு அரசு தொடக்க பள்ளியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை வனிதா தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனர். இதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் உதவி ஆசிரியர் செல்வராணி முன்னிலையில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா பரிசுகளை வழங்கி பாராட்டினார்."
Next Story






