என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
- வேலாயுதம்பாளையம் அருகே மணல் சலிக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்
- வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 36). சம்பவத்தன்று இவர் கரூர் வேலாயுதம்பாளையம் அருகே நொய்யலில் உள்ள மணல் சலிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரசாமி மணல் சலிப்பகம் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






