search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத நேரங்களில் வாகன நெரிசல்
    X

    போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத நேரங்களில் வாகன நெரிசல்

    • போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது
    • மனோகரா பகுதியில்

    கரூர்:

    கரூர், மனோகரா கார்னரில் சிக்னல் பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா கார்னர் பகுதியில் நான்கு வழிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, திண்டுக்கல், தான்தோன்றிமலை, மணப்பாறை போன்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், பழைய திண்டுக்கல் சாலையில் செல்கின்றன. இதேபோல இந்த வழியாக ஏராளமான மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் சென்று வருகின்றன.

    நான்கு ரோடுகள் சந்திக்கும் மனோகரா கார்னரில் பஸ்கள், மினி பஸ்கள் விதி மீறி நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக் கடி ஏற்பட்டு வந்தது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், மனோகரா கார்னர் சந்திப்பு பகுதியின் எதிரே டிராபிக் ஏற்படாதவாறும் கூண்டு அமைக்கப்பட்டது. அதில், போலீசார் நின்று கண்காணித்து, விதி மீறும் பஸ்களை மைக் மூலம் எச்சரித்து, போக்கு வரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டிராபிக் கூண்டில் போலீசார் இல்லாத சமயங்களில் பெரும்பாலான பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் அந்த நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மனோகரா கார்னர் பகுதியில் போக்குவரத்து போலீசார் முழு நேரமும் பணியிலிருக்குமாறும், அங்கு வாகன நெரிசல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×