என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெக்ஸ்டைல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    டெக்ஸ்டைல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • டெக்ஸ்டைல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    லாலாபேட்டை அருகே உள்ள கீழபஞ்சப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). டெக்ஸ்டைல் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார் சம்பவத்தன்று முத்தம்பட்டியில் உள்ள ஒரு தரிசுக்காட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×