என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    Karur News - State Level Judo Tournament in Karur
    X

    Karur News - State Level Judo Tournament in Karur

    • கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது
    • 15 பள்ளிகளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான ஜுடோ போட்டியில் 15 பள்ளிகளிலிருந்து 98 வகையான பிரிவுகளில் 325 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் பரணி வித்யாலயா மொத்தமாக 29 தங்க பதக்கத்தையும், 24 வெள்ளி பதக்கத்தையும், 22 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் 2 பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் 2-வது முறையாக 75 பதக்கங்களுடன் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.கொங்கு சகோதயா மாநில அளவிலான ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள். ஜூடோ பயிற்சியாளர்கள், முத்துலட்சுமி, பார்த்திபன், ரம்யா, கார்த்திகேயன். துரை, சாதனை படைத்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×