என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

    • கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்,

    கரூர் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    Next Story
    ×