search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

    • காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

    கரூர்:

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேக பாலீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், நந்தி பெருமான், பாகவள்ளி அம்பிகை சமேத மேகவாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவர்,தி ருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×