என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனை
    X

    முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனை

    • சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனை
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசு ப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்குபல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    Next Story
    ×