என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் மீது வழக்கு
- பெண்ணுக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சேந்தமங்கலம், காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணகுமார்(வயது 30), டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த, 26 வயது பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின், திருமணம் செய்துகொள்ள, சரவணகுமார் மறுத்துவிட்டதோடு, தனது தாய் செல்வி உடன் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் கரூர் மகளிர் போலீசார், சரவணகுமார், அவரது தாய் செல்வி ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story