என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரேசன் குறைதீர் கூட்டம்
  X

  ரேசன் குறைதீர் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரேசன் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
  • 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது

  கரூர்:

  கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை மறுநாள் ( 13-ந் தேதி) ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

  பொதுவிநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, அதில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் (13-ந் தேி) கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

  இதில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத் தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தில் பங்கேற்று தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×