என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி பிரதோஷ வழிபாடு
- புரட்டாசி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
- கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்
கரூர்:
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






