என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
  X

  ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது
  • பொதுமக்கள் கடும் அவதி

  கரூர்:

  தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரூர், ஜவஹர் பஜார் மற்றும் கோவை சாலையில் போக்குவ ரத்துக்கு இடையூறாக. வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  கரூர் நகரின் மையப் பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், ஏராளமான துணிக் கடைகள், நகை கடைகள், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, மையம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

  போக்குவரத்துக்கு இடையூறாக

  தினமும் காலை, 8 மணி முதல் இரவு 9 மணி வரை, கரூர், ஜவஹர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் வரும் 24 -ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க நாள்தோறும் கரூர்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கரூர், ஜவஹர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

  இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள் தங்களது கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக, இஷ்டத்துக்கு நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு, பல மணி நேரத்துக்குப் பிறகு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற் படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொது மக்களிடமிருந்து பணம், கொள்ளை யர்கள் பறித்து செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, கரூர், ஜவஹர் பஜார். கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  Next Story
  ×