search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு-அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
    X

    கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு-அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

    • கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில், கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் காந்தி கிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கி பேசியதாவது:- தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, ஒன்றரை ஆண்டுகளில் புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். மற்ற துறைகளை விட பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    எதிர்கால தமிழகத்தை வழிநடத்த கூடியவர்களாக, மாணவ, மாணவியர் இருப்பார்கள் என பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மூன்றாவது மண்டல குழு தலைவர் கோல்ட் ஸ்பாட் ராஜா உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும் கரூர் காமராஜ் தினசரி மார்கெட்டின், புதிய கட்டிட பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் காமராஜ் தினசரி மார்கெட் வணிக வளாகத்தில் 174 கடைகள் வர உள்ளன. அதில், தரைத்தள பணிகள் ஆறு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, வரும் ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். பின்னர் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முதல் தள பணிகள் தொடங்கும். மீன் மார்கெட்டுக்கு என தனியாக ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் விரைவில் கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×