என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு
- கரூர் டவுன் டி.எஸ்.பி.யாக சரவணன் பொறுபேற்று கொண்டார்
- திருச்சியில் குற்றப்பிரிவில் இருந்த அவர் கரூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்
கரூர்,
கரூர் டவுன் புதிய டி.எஸ்.பி.,யாக சரவணன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். கரூர் டவுன் டி.எஸ்.பி.,யாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்த தேவராஜ், கடலுார் மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ். பி., யாக இருந்த சரவணன், கரூர் டவுன் டி.எஸ்.பி., யாக மாற்றப்பட்டார். இவர், நேற்று கரூர் வடிவேல் நகரில் உள்ள, டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அப்போது, கரூர் டவுன் சப்-டிவிசனுக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள், போலீசார், புதிய டி.எஸ்.பி., சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்,
Next Story