என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காகித ஆலை ஊழியர் மகள் மாயம்
    X

    காகித ஆலை ஊழியர் மகள் மாயம்

    • கரூரில் காகித ஆலை ஊழியர் மகள் மாயமானார்
    • வேலாயுதம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (50). இவர் புகளூர் காகித ஆலையில் நிரந்தர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (22).பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் குணசேகரன் காகித ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டு பணிகள் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தனது மகள் புவனேஸ்வரியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த குணசேகரன், அவரது உறவினர்கள், நண்பர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று புவனேஸ்வரியை தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை, இது குறித்து புவனேஸ்வரியின் தந்தை குணசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×