என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி
- குளித்தலை அருகே பைக் மோதிய விபத்து கூலித்தொழிலாளி பலியானார்
- பாலவிடுதி போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, கடவூர் சுருமான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47) கூலித்தொழிலாளி. இவர், தனக்கு சொந்தமான, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், கடவூர்-இடையப்பட்டி நெடுஞ்சாலை, சுருமான்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே, மற்றொரு,' 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் அதிவேகமாக வந்தவர், பெருமாள் ஓட்டிவந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெருமா ளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அருகிலி ருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து புகார்படி, பால விடுதி போலீசார், விபத்தை ஏற்படுத்திய சுருமான்பட்டியை சேர்ந்த டிராவல்ஸ் வேன் டிரைவர் அறிவுநீதி (வயது 32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story






