search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய டென்னிஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி 4 பதக்கங்கள் வென்று சாதனை
    X

    தேசிய டென்னிஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி 4 பதக்கங்கள் வென்று சாதனை

    • தேசிய டென்னிஸ் போட்டியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.

    கரூர்:

    அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16-வது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவி யாழினி கலந்து கொண்டார்.தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் குழு பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களும், தனி நபர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் சாதனைப் படைத்தார். இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் என தேசிய அளவில் 4 பதக்கங்கள் பெற்றார். சாதனை புரிந்த மாணவி யாழினிக்கு அஹமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சாப்ட் டென்னிஸ் பெடரேசன் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மகேஷ் காஸ்வாலா, தேசிய பொதுச்செயலாளர் சகுந்தலா கடோதரா ஆகியோர் பதக்கங்கள் அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய அளவில் சாதனை படைத்து கரூருக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யாழினி, அவரது டென்னிஸ் பயிற்சியாளர் வினோத்குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×