என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் நடவு பணி தீவிரம்
- கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
- குறுகிய நாட்கள் மகசூல் கொடுக்கும் நெல் பயிரிடப்பட்டுள்ளது
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே, மகிளிப்பட்டி கிராமத்தில் நெல் நடவு பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மகிளிப்பட்டி கிராமத்தில் தற்போது, கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள், நெல் சாகுபடி செய்ய, நாற்றங்காலில் நெல் விதைகள் விதைத்தனர். இதையடுத்து, டிராக்டர் இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு, நிலம் சமன்படுத்தப்பட்டது. நெல் வயல்களில் தற்போது, குறுகிய நாட்களில் வரக்கூடிய நெல் பயிர் நடவுப் பணியில், விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story






