என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமுதாய சுகாதார வளாகம் திறப்பு
- புகழூர் நகராட்சியில் சமுதாய சுகாதார வளாகம் திறக்கப்பட்டது
- ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் காலனி பகுதியில் சமுதாய சுகாதார வளாகம் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி கமிஷனர் கனிராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






