search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளியணை அரசு பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிட பணிகள் - எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்
    X

    வெள்ளியணை அரசு பள்ளியில் 2 புதிய வகுப்பறை கட்டிட பணிகள் - எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்

    • கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
    • காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிணற்றை சுற்றி ரூ.2 லட்சத்தில் தடுப்பு கம்பி வேலி அமைத்தல் பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி தொடங்கிவைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021 -22லிருந்து ரூ.36 லட்சத்தில் இரு புதிய வகுப்பறைக்கான கட்டிடப்பணிக்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    அருகேயிருந்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36 லட்சத்தில் 2 புதிய வகுப்பறைக்கான கட்டிடப்பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ க.சிவகாமசுந்தரி தொடங்கி அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாணவிகள் பேருந்து வசதி கேட்டு எம்எல்ஏ க.சிவகாமசுந்தரியிடம் மனு அளித்தனர்.

    கரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன், தலைமை ஆசிரியை ம.கலையரசி, உதவி ஆசிரியர் சுதா, தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா, தாந்தோணி ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, பாகநத்தம் மற்றும் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சத்தில் அமைக்கப்பட்ட 2 ஸ்மார்ட் (திறன்) வகுப்பறைகள் திறந்து வைத்து, காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கிணற்றை சுற்றி ரூ.2 லட்சத்தில் தடுப்பு கம்பி வேலி அமைத்தல் பணிகளை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. க.சிவகாமசுந்தரி தொடங்கிவைத்தார்.

    Next Story
    ×