என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் பலி
- வாகன விபத்தில் பெண் சத்துணவு அமைப்பாளர் பலியானார்.
- மொபட் மீது கார் மோதியது
கரூர்
கரூர் வாங்கல் குப்புச்சிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 42). இவர் கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கரூர்-வாங்கல் சாலையில் வேட்டைகாரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டம், கிச்சிபாளையத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (42) சேலத்தில் இருந்து வாங்கல் வழியாக கரூரை நோக்கி காரில் வந்தார்.
அப்போது அந்த கார், மலர்கொடி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






