search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து குறைவால் முருங்கை விலை உயர்வு
    X

    வரத்து குறைவால் முருங்கை விலை உயர்வு

    • வரத்து குறைவால் முருங்கை விலை உயர்ந்துள்ளது.
    • கிலோ ரூ.90 க்கு விற்பனையாகின்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத் துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது.இப்பகுதி முருங்கை காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காயிக்கு தனி மவுசு உள்ளது. ஆகையால் அரவக்கு றிச்சி, மலைக்கோவிலூர், ஈசநத்தம் இந்திரா நகர், பள்ளப்பட்டி பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள் முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியா பாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பு வைப்பார்கள். இந்நிலையில் கடந்த மாதங்களில் முருங்கை மரங்களில் பூக் கள் பூத்துக் குழுங்கியது. தற்போது மழையினால் பூ உதிர்தல் உள்ளிட்ட காரணங்களால் அறு வடை இல்லாமல் உள் ளது. இதனால் தற்போது விவசாயிகளிடமிருந்து முருங்காய் மொத்த வியாபாரிகளுக்கு வரத்து குறைவாக உள்ளது. இதனால் சென்ற மாதங்களில் முருங்கை கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ.90 க்கு விற்பனையாகின்றது. சில்லரை விற்பனையில் ஒரு காய் ரூ.5க்கு விற்பனையாகின்றன.

    Next Story
    ×