search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் தி.மு.க.- பா.ஜ.க. போஸ்டர் யுத்தம்
    X

    கரூரில் தி.மு.க.- பா.ஜ.க. போஸ்டர் யுத்தம்

    • கரூரில் தி.மு.க.- பா.ஜ.க. போஸ்டர் யுத்தம் நடக்கிறது
    • கிழித்தெறிந்து விட்டார்கள்.

    கரூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மோதல்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வார பத்திரிகையின் அட்டையில் அண்ணாமலையை விமர்சித்து கட்டுரை வந்தது. இதனைப் பார்த்து உற்சாகமடைந்த உடன்பிறப்புகள் அந்த பத்திரிகையின் பெயருடன் கட்டுரை சம்பந்தப்பட்ட போஸ்டர்களை கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டி அண்ணாமலை மீதான கோபத்தை தணித்து கொண்டனர்.

    இது தி.மு.க.வினரின்

    கைங்கரியம் என்பதை அறிந்து பா.ஜ.க.வினர் அந்த போஸ்டர்களை கிழித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக வி. செந்தில் பாலாஜி இருந்தபோது வேலை வாங்கித் தர பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கினை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

    இதுவே பதிலடி கொடுக்கத்தக்க தருணம் என கருதிய பா.ஜ.க.வினர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை முதல்வர் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என நள்ளிரவு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வெறுப்பேற்றினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உ.பி.க்கள் அதையும் கிழித்தெறிந்து விட்டார்கள்.

    இது குறித்து பா.ஜ.க. தரப்பில் கூறும் போது,

    நாங்கள் கரூர் மாவட்ட பா.ஜ.க.என முகவரியுடன் போஸ்டர் ஓட்டுகிறோம். ஆனால் அவர்கள் மறைமுகமாக போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். எங்களது போஸ்டர்களை போலீசாரே கிழித்து விடுகிறார்கள் என தெரிவித்தனர்.

    தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது,அமைச்சரை கேலி கிண்டல் செய்யும் வகையில் போஸ்டர் ஓட்டுவதை கரூர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் கிழிக்காவிட்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பொதுமக்களே கிழித்து விடுகிறார்கள் என கூறினர்.

    Next Story
    ×