என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேங்காய் சுடும் திருவிழா
- வேலாயுதம்பாளையத்தில் ஆடியை முன்னிட்டு தேங்காய் சுடும் திருவிழா நடைபெற்றது.
- சுட்ட தேங்காயை விநாயகருக்கு படைத்து அதன் பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம்
வே.பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி பண்டிகையை முன்னிட்டு தேங்காய் சுடும் திருவிழா நடைபெற்றது. இதில் நொய்யல், முத்தனூர், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகள் அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு கலந்து கொண்டனர்.முதிர்ச்சி அடைந்த தேங்காய்களை எடுத்து தேங்காயில் துவாரம் போட்டு தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீருக்குள் வறுகடலை, பச்சரிசி, நாட்டுச்சக்கரை, எள், பாசிப்பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை பொடியாக்கி உள்ளே போட்டனர். பின்னர் தேங்காயில் உள்ள துவாரத்தில் நொச்சி குச்சியின் ஒரு முனையை வைத்து அடைத்து மறுமுனையின் குச்சியை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ மூட்டி அந்த தீயில் நன்றாக தேங்காயை சுட்டனர். பின்னர் அருகில் சுட்ட தேங்காயை, எடுத்து சென்று விநாயகர் கோயிலில் படையலிட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் தேங்காய் உடைக்கப்பட்டு, அனைவருக்கு விநியோகிக்கப்பட்டது.






